சனி, 28 பிப்ரவரி, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு சலுகைகளைப் பெறுவது எப்படி?


பிறப்பிலேயோ அல்லது விபத்து காரணமாகவோ அல்லது போலியோவால் உடல் ஊனமுற்றவர்களுக்கு கல்வி,பேருந்துப் பயணம், உபகரணம் மற்றும் திருமண உதவித்தொகை என நிறைய சலுகைகளை அரசு வழங்கி வருகிறது.


அவைகளை எப்படி பெறுவது?
இதற்கு முதலில் தேசிய அடையாள அட்டை தேவை..
அதை பெறுவது எப்படி?
இந்த அட்டை பெற்றவர்களே அரசு சலுகைகள் பெறமுடியும்...
இதற்கு மாற்றுத் திறனுடையோர் எனச் சான்று சிறப்பு மருத்துவரால் பெறவேன்டும்.
அட்டை பெற இணைக்க வேண்டிய சான்றுகள்:
1.இரண்டு புகைப்படம் மற்றும் மாற்றுத் திறனுடையோர் பற்றிய விவரம்,
2.ஓட்டு அடையாள அட்டை அல்லது ரேசன் கார்டு ஜெராக்ஸ்.
யாருக்கு விண்ணப்பிப்பது?
மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்.
இந்த அட்டை விண்ணப்பித்த ஒரே நாளில் கிடைக்கும்.

.....................................................
கல்வி உதவித் தொகை.









1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 500 ரூபாய்,
6 முதல் 8 ஆம் வகுப்பு வரை 1500 ரூபாய்.
9 முதல் 12 ஆம் வகுப்பு வரை 2000 ரூபாய்.
இளநிலை பட்டப்படிப்பு 3000 ரூபாய்,
முதுநில பட்டையப் படிப்பு 3500ரூபாய்.

இணைக்க வேண்டிய சான்றுகள்:
ஊனமுற்ற தேசிய அடையாள அட்டை,

வருமானச் சான்று,

9-ஆம் வகுப்புக்கு மேல் முந்தைய ஆண்டு இறுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் ,

குடும்ப அட்டை நகல்,

எப்போது விண்ணப்பிப்பது?
கல்வி ஆண்டில் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்,
யாறுக்கு விண்ணப்பிபது?
மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்.....
...........................................................................................
மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
இணைக்க வேண்டிய சான்றுகள்:
அடையாள அட்டை
குடும்ப அட்டை நகல்
ஊனத்தின் தன்மை40% மேல் இருக்க வேண்டும்.
எப்போது விண்ணப்பிப்பது?
அனைத்து அரசாங்க வேலை நாட்களும்.
யாறுக்கு விண்ணப்பிபது?
மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்.....
.................................................................................
இலவசப் பேருந்து சலுகை யாருக்கெல்லாம்?

பார்வையற்றோர் மாவட்டத்திற்குள்ளே பயணம் செய்யலாம்,
இதர மாற்றுத் திறனாளிகள் இருப்பிடத்திலிருந்து பணி
செய்யும் இடம், கல்வி பயிலும் இடம் வரை பயணம் செய்யலாம்.
இணைக்க வேண்டிய சான்றுகள்:
ஊனமுற்ற அடையாள அட்டை,
விண்ணப்பம்,
மூன்று புகைப்படங்கள்,
கல்வி,தொழிற்கல்வி நிலையம்,அல்லது பணிப்புரியும் இடத்தின் சான்று.
எப்போது விண்ணப்பிப்பது?
மார்ச் மாதம் முதல்,
யாறுக்கு விண்ணப்பிபது?
மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்.
விண்ணப்பித்த ஒரு மாத்த்திற்குள் கிடைக்கும்.
..........................................................................................................
சலுகைகள் பெற உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை போக்க மேலும் விபரங்களுக்கு Hele Line என்ற திட்டத்தை செயல்படுத்தி மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச ஆலோசனை வழங்கி வரும் கோவையை சேர்ந்த திரு.சூர்ய.நாராயணன் அவர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்...கைபேசி எண்.+919944556168.

குறிப்பு: விண்ணப்பம் கொடுக்க அல்லது சலுகைகள் வழங்க மறுத்தால் இந்தியன் குரல் உதவி மையத்தை தொடர்ப்புக்கு 9444305581.

நன்றி...

புதிய தலைமுறை...

திங்கள், 9 பிப்ரவரி, 2015

பொன்னாங்கண்ணி கீரையின் பொன்னான ஆரோக்கிய நன்மைகள்!



பொதுவாகவே கீரைகளில் பல ஆரோக்கிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அதனால் தான் நமது மூதாதையர்கள் அவர்களது அன்றாட உணவுப் பழக்கத்தில் தினசரி கீரைகளை சேர்த்து வந்தனர். கீரைகளில் பல வகைகள் உண்டு. அதில் பொன்னாங்கண்ணியை கீரைகளின் அரசன் என்றே அழைக்கலாம். ஏனெனில், இதில் உள்ள எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நமது உடல் சார்ந்த பல குறைப்பாடுகளுக்கு நல்ல பயன் தருகிறது.

பொன்னாங்கண்ணி கீரையில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, கனிமச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளது. இ‌ந்த‌க் கீரையை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால், பகலிலும் நிலவைப் பார்க்கலாம் என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு பொன்னாங்கண்ணியில் கண்பார்வைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன..

1) கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.

2) பொன்னாங்கண்ணியில் உள்ள ஊட்டச்சத்துகள் உடல்நலம் வலுவடையவும், சருமம் பொலிவடையவும் பெருமளவில் பயனளிக்கிறது.

3) மூல நோய், மண்ணீரல் போன்ற நோய்களால் அவதிப் படுபவர்கள் பொன்னாங்கண்ணியை தினசரி உட்கொண்டு வந்தால் விரைவில் நோய் குணமாகும்.

4) இன்று நாம் உண்ணும் உணவில் இருந்து சுவாசிக்கும் காற்று வரை அனைத்திலும் இரசாயனம் கலந்திருப்பதால். அவை நேரடியாக இரத்தத்தில் கலந்து விடுகின்றன. இதனால் இரத்தம் அசுத்தமடைகின்றது. பொன்னாங்கண்ணிக் கீரையை நன்றாக கழுவி சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேக வைத்து சாப்பிட்டு வந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும்.

5) அதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும், கண்களில் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சனைக்கு நல்ல பலனளிக்கும்.



6) வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் காலை வேளையில் பொன்னாங்கண்ணியை சாப்பிட்டு வந்தால் விரைவில் வாய் துர்நாற்றப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

7 ) பொன்னாங்கண்ணியில், இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு கொடுப்பதுடன்  ஆரோக்கிய பயன்கள் உண்டு. அதனால் முடிந்த வரை வாரம் இரண்டு அல்லது மூன்று முறையாவது உங்களது உணவுப் பழக்கத்தில் பொன்னாங்கண்ணியை சேர்த்துக் கொள்வது நல்ல ஆரோக்கியம் தரும்.