செவ்வாய், 22 டிசம்பர், 2015

ஆண்களே! தலைமுடி அதிகம் கொட்டி சொட்டை விழுவது போல் உள்ளதா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்!


ஆண்களும், பெண்களும் அன்றாடம் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. 

இந்த பிரச்சனைக்காக பலரும் மருத்துவர்களை சந்தித்து சிகிச்சைகளைப் பெற்று வருவார்கள். 

முதலில் முடி உதிர்வதற்கு காரணம் என்னவென்று ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். 
அதில் மோசமான டயட், மன அழுத்தம், தூக்கமின்மை, ஹார்மோன் மாற்றங்கள் போன்றவை முக்கிய காரணங்களாகும். 
ஒருவருக்கு அழகே முடி தான். அந்த முடி உதிர்ந்தால், உங்கள் அழகு பாழாகும். அதிலும் ஆண்கள் அளவுக்கு அதிகமாக டென்சன் மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளாவதால், அதன் விளைவாக முடி அதிகம் உதிர்ந்து சொட்டைத் தலையை சந்திக்கின்றனர். 

மேலும் சொட்டை விழுந்தால் தலைமுடி மீண்டும் அவ்வளவு எளிதில் வளராது. ஆனால் போதிய சிகிச்சைகளை எடுத்து வந்தால், நிச்சயம் வழுக்கை விழுந்த இடத்தில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

அதற்கு மருத்துவரிடம் சென்று பணம் செலவழிப்பதற்கு பதிலாக, வீட்டிலேயே ஒருசில இயற்கை வழிகளைப் பின்பற்றினால் சொட்டை தலையில் முடியை வளரச் செய்யலாம். 

இங்கு முடி உதிர்வதைத் தடுக்கவும், சொட்டைத் தலையில் முடியின் வளர்ச்சியைத் தூண்ட உதவும் சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து முயற்சித்துப் பாருங்கள்.
முடியின் வளர்ச்சிக்கு புரோட்டீன் அதிக அளவில் தேவைப்படும். அதிலும் இந்த பவுடர் கடல் மீனில் இருந்து பெறப்படுகிறது.

இந்த புரோட்டீன் பவுடரில் மெர்குரி மற்றும் இதர டாக்ஸின்கள் இருக்காது. மேலும் இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது.

 ஆய்வு ஒன்றிலும் கடல் மீனில் இருந்து தயாரிக்கப்படும் புரோட்டீன் பவுடர் தலைமுடி உதிர்வதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

டோக்ட்ரினொல் கேப்ஸ்யூலில் வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ளது. இது தலைமுடியின் அடர்த்தியான வளர்ச்சிக்கு தேவையான ஓர் சத்து. இந்த கேப்ஸ்யூலை தினமும் 100 மிகி அளவில் எடுத்து வந்தால், முடியின் வளர்ச்சி அதிகரிக்கும் மற்றும் தலைமுடி உதிர்வது குறையும். இது மற்றொரு சிறப்பான சொட்டைத் தலைக்கான பொருள். 

இந்த நீர்மம் அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்கும். இதனை தினமும் ஸ்கால்ப்பில் தடவி வந்தால், மெலடோனின் ஹார்மோன் உடலில் உற்பத்தி செய்யப்பட்டு, நல்ல சீரான தூக்கத்தைப் பெற செய்வதோடு, முடியின் வளர்ச்சியையும் அதிகரிக்கும். இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் இதர அத்தியாவசிய கொழுப்புக்கள் நிறைந்துள்ளது.

இந்த ஃபேட்டி ஆசிட் தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவுவதோடு, அதன் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். அதற்கு பூசணிக்காய் விதை எண்ணெய் கேப்ஸ்யூலை தினமும் 400 மிகி அளவில் எடுத்து வர வேண்டும். இதனால் சொட்டைத் தலையிலும் முடி வளர்வதைக் காணலாம். புதினா எண்ணெயை தினமும் தலையில் ஸ்கால்ப்பில் நன்கு படும்படி தடவி மசாஜ் செய்து வர வேண்டும். இப்படி 4 வாரம் தொடர்ந்து செய்து வர வேண்டும். மேலும் தலைக்கு ஷாம்பு போடும் போது, அத்துடனும் சிறிது புதினா எண்ணெய் சேர்த்துக் கொள்வது நல்லது. இந்த செயல்களின் மூலம் வழுக்கைத் தலையில் முடியின் வளர்ச்சி அதிகமாக இருப்பதோடு, முடி உதிரும் பிரச்சனை இருந்தால் குறையும். இந்த கரைசல் மருந்து கடைகளில் கிடைக்கும். 

இதனை தினமும் ஸ்கால்பில் சில துளிகள் ஊற்றி தடவி, மசாஜ் செய்யாமல், அழுத்தி விட வேண்டும். இப்படி மூன்று மாதங்கள் தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தை நீங்களே காணலாம்.

 ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, தினமும் இரவில் படுக்கும் போது தலையில் தடவி வந்தால், தலையில் இரத்த ஓட்டம்அதிகரித்து, முடியின் வளர்ச்சி தூண்டப்படும். மேலும் இந்த எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளதால், இது முடிக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கி, முடி உதிர்வதையும் தடுக்கும்.

நன்றி.
OneIndia

குடல் புண்களை அழித்து இரத்தத்தை சுத்திகரிக்கும் நாவல்



நாவல் பழத்தில் கால்சியம் அதிக அளவில் இருக்கிறது மேலும் சோடியம், தாமிரம் ஆகியவை கணிசமான அளவில் உள்ளது. வைட்டமின் பி1, பி2, பி6 ஒன்றாக உள்ள அரிதான பழம். 'கால்சியம், எலும்புகளுக்கு உறுதியைக் கொடுப்பதுடன்

 உடலை வலிமையாக்கும். ரத்தத்தைச் சுத்திகரித்து ரத்த விருத்தியடையச் செய்யும். ரத்தசோகைக்கு மிகச்சிறந்த மருந்தே நாவல் பழம்தான். இதிலுள்ள வைட்டமின் சி உணவிலிருந்து இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்கும்.

 நாவல் பழத்திலுள்ள 'ஜம்போலினின்' எனும் 'குளுக்கோசைடு' உடலில் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாட்டைத் தடுக்கிறது. 

இதனால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் நாவல் பழத்தை உணவாக அல்லாமல் மருந்தாக பத்தியமிருந்து 1 மண்டலத்துக்குச் சாப்பிட்டு வர, சர்க்கரையின் அளவு குறைந்து கட்டுக்குள் இருக்கும். 

நாள்பட்ட சர்க்கரை நோய் உடையவர்கள் நாவல் பழ விதையை காயவைத்து பொடியாக்கி, புளித்த மோரில் கலந்து குடிக்கலாம். இந்தப் பழத்தில் 'குயுமின்' எனும் 'ஆல்கலாய்டு' உள்ளது. இது தோலில் சுருக்கங்கள் விழுவதைத் தடுத்து வயதாவதைத் தள்ளிப்போடும்.

உடலில் புதிய செல்களைப்புதுப்பிக்கும் திறன்கொண்ட 'ஆன்டி ஆக்சிடன்ட்' ஆப்பிள், கேரட், மாதுளையைவிட நாவல் பழத்தில் அதிகம். 

இதனால் தோலில் ஏற்படும் வெண்புள்ளி, அரிப்பு போன்றவற்றைக் குணப்படுத்தும். நாவலை தொடர்ந்து உண்டுவர தோல் பொலிவு கிடைக்கும். வாய் முதல் குடல் வரை ஏற்படுகிற புண்களைக் குணப்படுத்தும். 

அதிகமாக சிறுநீர் கழிக்கும் பிரச்னை உள்ளவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் போக்குக் கட்டுக்குள் வரும். 

பசியைத் தூண்டும். நாவல் பழம் குளிர்ச்சியானது என்பதால் உடல் சூட்டைத் தணிக்கும். கல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் நோய்களையும், மஞ்சள் காமாலையையும் குணப்படுத்தக் கூடியது.

பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான சிக்கல், வெள்ளைப்படுதல், மாதவிடாயின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு ஆகியவற்றையும் நாவல் பழம் சரியாகும். நாவல் பழத்தை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாது என்பார்கள். 

இது தவறு! சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக்கூடிய அற்புத பழம். இப்போது நகர்புறங்களில் விதையில்லா 'ஹைப்ரிட் வகை' நாவல் பழங்கள் அதிகமாக விற்கப்படுகின்றன. இதில் கொஞ்சம்கூட சத்து கிடையாது. நாட்டு நாவல் பழத்தில் மட்டுமே மேற்கூறிய பலன்கள் கிடைக்கும்.

வரும் முன் காக்கும் தடுப்பு மருந்து வந்த பின் தீர்க்கும் அருமருந்து!



வெயிலில் வெந்து நொந்தவர்களுக்கு நவம்பர் மாதத்தில் சட்டென்று வானிலை மாறுவது எத்தனை இதம் என்று சொல்லத் தேவையில்லை.

 'பனிவிழும் மலர்வனம்' என்று பாடுவதற்கோ, 'அடடா மழைடா...' என்று ஆடுவதற்கோ இதுவே சரியான நேரம். 

ஆனால், இந்த ரம்மியமான காலத்தில்தான் ஜலதோஷம், காய்ச்சல், தலைவலி என்று பல அழையாத விருந்தாளி களையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது.

 ''மருத்துவமனைகள் நிரம்பி வழியும் இந்த பருவ காலத்தில் நோய் வரும் முன்னர் காக்கும் தடுப்பு மருந்தாகவும் வந்த பின்னர் நோயைத் தீர்க்கும் அருமருந்தாகவும் இரண்டு வேலைகளை செய்கிறது நிலவேம்பு'' என்கிறார் சித்த மருத்துவரான அபிராமி. 

ஆமாம்... சமீபகாலமாக அடிக்கடி கேள்விப்படும் அதே நிலவேம்பு தான்! ''நிலவேம்பு என்பது 2 அடி வரை வளரும் ஒரு செடி வகை. மலை, மண் வளம் உள்ள இடங்களில் எளிதாக வளரும். தாவரவியலில் Andrographis Paniculata என்று இந்தச் செடியை அழைக்கிறார்கள். நாம் அடிக்கடி கேள்விப்படுகிற நிலவேம்பு கஷாயம் இந்த செடியிலிருந்தே தயாரிக்கப்படுகிறது.

 இந்தக் கஷாயத்தை 9 கூட்டுமருந்துகள் கலந்து சித்த மருத்துவர்கள் கொடுப்பார்கள். 
இந்த கஷாயத்தைதான் நிலவேம்பு குடிநீர் என்று சொல்கிறோம். கடந்த சில வருடங்களாக விதவிதமான காய்ச்சல்கள் நம் ஊரில் வந்துகொண்டிருப்பது எல்லோருக்கும் தெரியும். டெங்கு காய்ச்சல், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் என்று புதிய புதிய காய்ச்சல்கள் வரும்போது வழக்கமான மருத்துவ முறைகளால் சமாளிக்க முடியாத சூழ்நிலையை நிலவேம்பு சாதித்திருக்கிறது...

'' நிலவேம்பு பிரபலமானது எப்படி? ''திடீரென பன்றிக் காய்ச்சல் பரவிக் கொண்டிருந்த போது நவீன மருத்துவம் இருந்தும் என்ன செய்வது என தெரியாமல் அரசாங்கமே ஸ்தம்பித்துப் போனது. ஒரு பக்கம் அதை பற்றிய பயம், மறுபக்கம் அது என்ன காய்ச்சல் என்று தெரியாத நிலை, போதுமான பரிசோதனை நிலையங்கள் இல்லாமல் மாதிரிகளை எடுத்துக் கொண்டு அலைக்கழித்த இக்கட்டான நேரத்தில் நிலவேம்பு பெரிய உதவி செய்தது. 

மற்ற மாநிலங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்தபோதும், தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு குறைவாக இருந்ததற்கு காரணம் நிலவேம்பு குடிநீர் கொடுத்த பாதுகாப்புதான் என்று உறுதியாக சொல்லலாம். டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதித்த இக்கட்டான சூழல்களில் நிலவேம்பின் மகத்துவத்தை உணர்ந்ததால்தான் அரசாங்கமே அதை விளம்பரப்படுத்தி, 

மருத்துவமனைகளில் நிலவேம்பு குடிநீருக்காக தனிப்பிரிவே தொடங்கியது...'' எங்கு கிடைக்கும்? ''எல்லா சித்த மருந்துக்கடைகளிலும் 9 கூட்டு மருந்துகளுடன் கலக்கப்பட்ட நிலவேம்பு கலவை கிடைக்கும். 

அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவப் பிரிவு, தமிழ்நாடு அரசின் டாம்ப்கால், சென்னை அடையாறு பகுதியில் செயல்படும் சித்த மருத்துவர்களின் கூட்டுறவு சங்கம் ஆகிய இடங்களில் கிடைக்கும். காதிபவன், சித்த மருந்துக் கடைகள், நாட்டு மருந்துக் கடைகள் போன்றவற்றிலும் நிலவேம்பு கிடைக்கிறது.

'' நிலவேம்பு குடிநீரை எப்படி செய்ய வேண்டும்? ''கைப்பிடி அளவு நிலவேம்புப் பொடியை 500 மி.லி. தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பிறகு, 2 ஏலக்காய், 2 கிராம்பு போன்றவற்றையும் வாசனைக்காக சேர்த்து மூடி வைத்து கொதிக்கவிட வேண்டும். இந்த தண்ணீர் மூன்றில் ஒரு பங்காக சுண்டிய பிறகு, வடிகட்டி சாப்பிடலாம். 

காய்ச்சல் இருப்பவர்கள் காலை, இரவு என இரண்டு வேளை தலா 60 மி.லி. சாப்பிட்டால் போதும். நிலவேம்பு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் என்பதால், காய்ச்சல் இல்லாதவர்களும் தடுப்பு மருந்தாக இரண்டு ஸ்பூன் அளவு சாப்பிட்டுக் கொள்ளலாம். 

நிலவேம்பின் கசப்பைப் போக்க கொஞ்சம் சர்க்கரை, வெல்லம், தேன் என ஏதாவது ஒன்றை கலந்து காய்ச்சி தேநீர் போலவும் பயன்படுத்தலாம். தேன் ஒரு சிறந்த மருந்து என்பதால் தேனுக்கு முன்னுரிமை கொடுப்பது இன்னும் நல்லது. நீரிழிவு உள்ளவர்கள் இனிப்பு சேர்க்காமல் சாப்பிட்டுக் கொள்ளலாம்..

'' என்னென்ன மருத்துவ பயன்கள் உள்ளன? ''எந்த விஷக்காய்ச்சலாக(Viral Fever) இருந்தாலும் நிலவேம்பு குடிநீருக்குக் கட்டுப்பட்டுவிடும். காய்ச்சலின் போது உடலில் இருக்கும் வைரஸையும் முழுமையாக அழித்துவிடுவதால் காய்ச்சலுடன் மூட்டுவலியும் காணாமல் போய் விடும். 
காய்ச்சல் வந்தவுடன் பலரும் ஆங்கில மருத்துவத்தையே தேடுவார்கள். உங்கள் திருப்திக்காக ஆங்கில மருத்துவம் எடுத்துக் கொள்ளும்போது நிலவேம்பு குடி நீரையும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். 

நிலவேம்பு குடிநீரால் எந்த பக்க விளைவுகளும் கிடையாது. அதனால், 5 நாட்களில் ஆங்கில மருத்துவம் குணப்படுத்துகிறது என்றால், நிலவேம்பு குடிநீர் சில நாட்களில் குணப்படுத்த உங்களுக்கு உதவி செய்யும். 

காய்ச்சலால் ஏற்படும் உடல் சோர்வும் சரியாகிவிடும். சித்த மருத்துவத்தின் முக்கியத்துவத்தை நிலவேம்பு உணர்த்தியிருக்கிறதா? ''நம் வருமானத்தின் பெரும்பகுதி மருத்துவச் செலவுக்கே சரியாகிவிடுகிற இன்றைய சூழலில், மிகக்குறைந்த செலவில் குணப்படுத்தும் சித்த மருத்துவத்தின் முக்கியத்துவத்தை நிலவேம்பு நமக்கு உணர்த்தியிருக்கிறது. 

இது சித்த மருத்துவம் என்கிற கடலில் ஒரு துளிதான். இன்னும் எத்தனையோ விஷயங்கள் வெளி உலகுக்குத் தெரியாமல் இருக்கின்றன. மக்களிடம் இப்போது இயற்கை பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. 

அதனால்தான் நெல்லிக்காய் கலந்த தைலம், மருதாணி கலந்த எண்ணெய், பழங்கள் கலந்த ஃபேஷியல் என்று விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.

 நோய் எதிர்ப்பு சக்தி யாருக்கு அதிகமாக இருக்கிறதோ அவர்களுக்கு எபோலா வருவதில்லை என்பதை சமீபத்தில் கண்டு பிடித்திருக்கிறார்கள். பனி, மழைக்கு பயந்து வீட்டிலேயே நம்மால் உட்கார்ந்திருக்க முடியாது. 

ஆனால், இந்த பருவத்திலும் எங்கள் வீட்டில் யாருக்கும் உடல்நலக் குறைவு இல்லை என்று சொல்லும் அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்க நிலவேம்பு நமக்கு உதவி செய்யும்!'' - ஞானதேசிகன் படம்: ஆர்.கோபால்