வியாழன், 28 ஜூன், 2012

மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க



பருவகாலம் மாறுவது உடலுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். அதிலும் மழைக்காலம் வந்துவிட்டால், உடலில் இருமல், சளி மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்றவை வந்துவிடும்.
ஆகவே வரும் முன் காப்பதே மேல் என்னும் பழமொழிக்கேற்ப அத்தகைய நோய்கள் வருவதற்கு முன் எப்படி இருக்க வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், சாப்பிடக் கூடாது என்று இருக்கிறது. அப்படி எதுவும் வராமல் ஆரோக்கியமாக இருக்க ஒரு சில டிப்ஸ்கள் இருக்கிறது.

மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க

1. குளிர்ந்த தண்ணீர் குடிக்க வேண்டாம்:

 கோடை காலத்தில் வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும், ஃப்ரிட்ஜில் இருந்து குளிர்ந்த தண்ணீரை எடுத்து குடிப்போம்.

ஆனால் மழைக் காலத்தில் அந்த பழக்கத்தை தொடர வேண்டாம். சில சமயம் அதை குடிக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் அப்படி குடிக்க வேண்டாம். இல்லையென்றால் வராத நோயை வர வைத்துக் கொண்டது போல ஆகிவிடும்.

2. உணவில் கட்டுப்பாடு வேண்டும்:

 மழைக்காலத்தில் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் அதிகம் வர வாய்ப்பு இருக்கிறது. மேலும் மழைக்காலத்தில் தெரு ஓரத்தில் நிறைய நீர் தேங்கியிருப்பதால் கொசுக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் போன்றவை அதிகம் இருக்கும்.

எனவே தெரு ஓரத்தில் விற்கப்படும் உணவுகளை வாங்கி சாப்பிட வேண்டாம். மக்கிய காய்கறிகள், நாள்பட்ட தயிர், சுத்தமில்லாத தண்ணீர் அனைத்துமே உடலுக்கு தீங்கை விளைவிக்கக்கூடியது. ஆகவே அனைத்தையுமே பார்த்து வாங்க வேண்டும்.




3. சுகாதாரம் தேவை:

 மழைக்காலத்தில் நிறைய தொற்று நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம் உண்டு. அதிலும் அந்த நேரத்தில் மழையால் பாதமானது ஈரமாக இருக்கும்.

ஆகவே அடிக்கடி கால் விரல்களில் உள்ள நகங்களை சுத்தம் செய்ய வேண்டும். மழை நீர் கூந்தலை அதிகம் பாதிக்கும், ஆகவே வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும், மறக்காமல் கூந்தலை நீரில் அலச வேண்டும்.

மேலும் காலணியை வெயில் அடிக்கும் போது, வெயிலில் வைத்து காய வைத்தால், காலணியில் இருக்கும் பாக்டீரியா மற்றும் மற்ற கிருமிகள் இருந்தால் அழிந்து விடும்.

மேலும் சுத்தமான உடைகளையே தினமும் உடுத்த வேண்டும். இதனால் உடலில் நோய்கள் வராமல் தடுக்கலாம்.



4. வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கவும்:

குளிக்கும் போது ஷவரில் குளித்தால் இருமல் அல்லது காய்ச்சல் போன்றவை வரக்கூடும். ஆகவே குளிக்கும் போது வெதுவெதுப்பான சுடு நீரில் குளித்தால் எந்த ஒரு நோயும் வராது.

மேலும் சுடு தண்ணீர் உடலில் உள்ள கிருமிகளை அழிக்கும். ஆகவே சுடு தண்ணீரில் குளித்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக