கடவுள் ஒரு இளைஞரிடம் தோன்றி
உன் மரணம் நெருங்கி விட்டது
எப்போ உன் உயிரை நான் எடுப்பது என்றார்
அவனோ பதற்றத்துடன் கடவுளே நான் இப்போதான் படித்து முடித்தேன் அதானால் எனக்கு சின்ன கடமை இருக்கு என் அம்மா அப்பா நண்பர்கள்,
கூட பிறந்தவர்களை பிரிய முடிய வில்லை,
எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என்றான்.
கடவுளும் சரி நான் போய் வருகிறேன்.. என்று மறைந்தார்
பின் கொஞ்சம் நாள் கழித்து கடவுள் வந்தார் மனிதா வா போகலாம் என்றார்.
கடவுளே இப்போதுதான் நான் நல்ல வேலையில் சேர்த்தேன் நல்ல சம்பளம் கொஞ்சம் பணம் கிடைத்ததும் வீடு கட்டணும்,
அம்மா அப்பாவை சந்தோஷமாக பார்த்துக்கணும்,
புதிய நண்பர்களுடன் கொஞ்சம் ஊர் சுற்றனும்,
இன்னும் கொஞ்சம் நாள் கொடுங்கள் சந்தோஷமாக இருந்துவிடுகிறேன் என்றான்.
கடவுளும் சரி நான் வருகிறேன் சொல்லிட்டு சென்று விட்டார்,
அவன் சொன்னது போன்று வீடு கட்டினான் நண்பர்களுடன் சந்தோஷமாக இருந்தான்,
அவன் அப்பா அம்மா அவனுக்கு பெண் பார்த்து கல்யாணமும் செய்து வைத்தார்கள்,வாழ்க்கை சந்தோஷமாக சிறிது காலம் நகர்ந்தது..
கடவுள் மீண்டும் வந்தார் பக்தா என்று அழைத்தார்..
அவனோ பதறிபோய் ஐயோ வந்து விட்டதே என்ன சொல்ல என்று தெரியாமல் மன்னிக்கவும் கடவுளே எனக்கு இப்போதான் கல்யாணம் ஆனது அதனால் கொஞ்சம் எனக்காக இல்லைனாலும் என் மனைவிக்காக கொஞ்சம் காலம் நான் உயிருடன் இருக்கணும் என்றான்.
கடவுள் சிரித்துக்கொண்டே
பக்தா நான் இப்போ வந்தது
உன் உயிரை பறிக்க அல்ல
நீ கல்யாணத்துக்கு முன்னாடி
சந்தோஷமாக இருக்கவே
நான் நடத்திய நாடகம் இது என்று கூறி விட்டு மறைந்து விட்டார்..