வெள்ளி, 30 மார்ச், 2012

இன்று பலாபழம் ஒரு தகவல்....



பலாச்சுளைகள் பொட்டாசியம்இ கால்சியம்இ பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி யும் அதிக அளவில் கொண்டுள்ளன. கொட்டைகள் உயிர்ச்சத்து பி1இ பி2 ஆகியவை கொண்டுள்ளன.






  • அதிக அளவில் பலாப்பழம் உண்பது நல்லதல்ல என்ற கருத்து நிலவுகிறது. பழுக்காத பழச்சுளையை அப்படியே உண்பது நல்லதல்ல. அதே போல சமைக்காத கொட்டைகள் ட்ரிப்சின் என்ற புரதச்சிதைவு நொதியை பாதிப்பதால் செரிமாணத்தை பாதிக்ககூடும். பழுத்த பலாச்சுளைகள் மலமிளக்கியாக செயல்படுகின்றன.


  • முக்கனிகளில் தேன் சுவை கொண்ட கனியாக போற்றப்படுவது பலா. பழங்களின் அரசன் என்ற
    பெருமைக்குரியது பலாப்பழம்.. மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம்
    பலாப்பழமாகும். பூமத்தியரேகைப் பகுதிகளில் இது அதிகமாகக் காணப்படும் . சில
    இடங்களில் மட்டுமே இது முறையான விவசாய முறைகளின் படி முழுமையான தோட்டங்களில்
    வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் மற்ற பழத்தோட்டங்களில்
    துணைப்பயிராகவோ அல்லது வீட்டுத்தோட்டங்களிலோ வளர்க்கப்படுகிறது..

    பலாவில் உள்ள சத்துக்கள்

    பலாப்பலத்தில் புரதச்சத்துக்களும், மாவுச்சத்துக்களும், வைட்டமின்களும் அதிகம்
    காணப்படுகின்றன. ஏ, சி மற்றும் சில பி வைட்டமின்களும் உள்ளன. தவிர கால்சியம்,
    துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட கனிமப்பொருட்களும் பலாப்பழத்தில் அடங்கியுள்ளன.


    நரம்புகளை உறுதியாக்கும் பலா

    வைட்டமின் ஏ உயிர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது உடலுக்கும், மூளைக்கும்
    வலுவை அளிக்கும். மேல் தோலை மிருதுவாகவும், வழவழப்பாகவும் செய்யும்,
    நரம்புகளுக்கு உறுதி தரும்.
    ரத்தத்தை விருத்தியாக்கும். பல் தொடர்பான நோய்களைப் போக்கும் ஆற்றலும் இதற்கு
    உண்டு. தொற்றுக்கிருமிகளை அழிக்கும் சக்தியும் இதற்கு உண்டு.
    நெய் அல்லது தேன் கலந்த பலாப்பலத்தைச் சாப்பிட்டால் இதயம், மூளை
    வளர்ச்சியடையும், நரம்புகளும் வலுப்படும்.. உடலுக்கு ஊட்டத்தை அளிக்கும்.

    தேனில் ஊறிய பலா

    பலாப்பாழத்தை முறையுடன் சாப்பிட்டால் கெடுதல் இருக்காது.. பலா பழத்தை சாப்பிட்ட
    உடன், சிறிது நெய் அல்லது கொஞ்சம் பாலை அருந்தினால் எந்த தொல்லைகளும் ஏற்படாது.
    உடல் பலம் பெறும்.
    வெறும் பலாப்பலத்தை சாப்பிடாது சிறிது நாட்டுச்சர்க்கரையை கலந்து சாப்பிட
    உடல்புத்துணர்ச்சி பெறும். தாகம் தணியும். எளிதில் சீரணமாகும். குடலுக்கு
    வலிமை தரும்.

    அதிகம் சாப்பிட்டால் ஆபத்து
    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. இது பலாப்பழத்திற்கும் பொருந்தும்.
    குடல்வால் அலற்சி அதாவது அப்பன்டிசைட்டிஸ் உள்ளவர்கள் பலாப் பழத்தை சாப்பிடவே
    கூடாது.

    பெண்கள் மாதவிடாய் காலங்களில் தவிர்ப்பது நல்லது. இதனால் போக்கு மிகுதிப்படும்.
    பால் கொடுக்கும் தாய்மார்கள் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனால்
    குழந்தைகளுக்கு மாந்தநோய் ஏற்படும்.
    மூல நோய் உள்ளவர்கள் அதிகம் சாப்பிட்டால் தொல்லை அதிகமாகும். வாதநோய்க்கும்
    ஆகாது. இருமல் நோய் உள்ளவர்கள் சாப்பிட்டால் இருமல் அதிகமாகும்.


    பலாப்பிஞ்சு

    பலாப்பிஞ்சு கறி சமைக்க உதவும். இதனை அதிகமாக உண்பதால் செரியாமை, வயிற்று வலி
    போன்றவை ஏற்படும். பலாப் பழத்தை அளவுடன்தான் சாப்பிட வேண்டும். அதிகமாக
    சாப்பிட்டால், வயிறு மந்தமாகி வயிற்று வலியையும், வாந்தியையும் ஏற்படுத்தும்.
    பலாக் கொட்டையை சுட்டு சாப்பிட்டால் அல்லு மாந்தம், மலச்சிக்கல், புளியேப்பம்,
    கல் போன்று வயிறு கட்டிப்படல் ஏற்படும்.
    பலாப் பிஞ்சினை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வந்தால் சொறி, சிரங்கு, கரப்பான்,
    கோழைக்கட்டு, இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக