சனி, 31 மார்ச், 2012

White Leadwort

வீடுகளில் அலங்கார செடிகளாக வளர்க்கப்படும் ஒரு சில தாவரங்கள் மருத்துவ குணம் மூலிகைகளாக செயல்படுகின்றன. சித்தரகம் எனப்படும் புதர்வகைத்தாவரம் கூட இத்தகையதே. தென்னிந்தியாவைச் சேர்ந்த சித்தரகம் மலேசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் வளர்க்கப்படுகிறது. இந்தியாவில் பீகார், மேற்கு வங்காளம், தென்னிந்திய மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. தொற்றிப்படரும் இந்த புதர்வகைத்தாவரம் அலங்காரச்செடியாகவும் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது.

சித்தரகத்தின் வேர், வேர்பட்டை மற்றும் இலைகள் மருத்துவப்பயன் கொண்டவை. இவை வருடம் முழுவதும் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
பிளம்பாஜின், எனப்படும் நாப்தா குயினோன்கள் மற்றும் பைட்டோஸ்டிரால்கள் காணப்படுகின்றன.

உடல் எடை குறையும்

வேர்ப்பகுதி கசப்பானது, இது வியர்வை தூண்டுவியாக செயல்படுகிறது. தோல்நோய்களான சொறி, படை, ஆகியவற்றின் மீது களிம்பாக பூசப்படுகிறது. இதே களிம்பு மூட்டுவலி போக்குவியாக பயன்படுகிறது. இந்திய மருத்துவத்தில் இலை மற்றும் வேர், வயிற்றுப்போக்கு போன்ற ஜீரண கோளாறுகளுக்கு மருந்தாகும். உடல் எடை குறைக்க உதவும்.

வழுக்கைத்தலைக்கு மருந்து

நேபாளத்தில் வேர் கசாயம் தலை வழுக்கையினைப் போக்க பயன்படுத்தப்படுகிறது. சித்தரகத்தின் சாறு ஆப்பிரிக்க கண்டத்தில் பச்சைக் குத்துவதில் சாயமாக பயன்படுத்தப்படுகிறது.

சித்தரகத்தின் மற்றொரு சிற்றினத்தின் வேர் பல்வலி மற்றும் முதுகுவலி ஆகியவற்றின் களிம்பாக உதவுகிறது. வேர் உள் மருந்தாக சாப்பிடும்போது கவனமாக இருக்கவேண்டும். மருத்துவ ஆலோசனையின்றி சாப்பிடும்போது கருச்சிதைவு ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக