சனி, 14 ஏப்ரல், 2012

நீண்ட இடைவேளைக்கு பிறகு

வணக்கம் நண்பர்களே!

நீண்ட இடைவேளைக்கு பிறகு தங்களை தொடர்ப்பு கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்  நான்.

இந்த இடைவேளைக்கு காரணம் நேரம் இல்லாமையோ அல்லது வேலை அதிகமோ கிடையாது? 

நான் வேலை பார்க்கும் இடம் சூடான். இங்கு கடந்த நான்கு வாரமாக தெற்கு சூடன் மற்றும் வடக்கு சூடானுக்கும்  பலத்த சண்டை நடந்து வருகிறது, முதலில் சாதரணமாக ஆரம்பித்த இந்த பிரச்னை பின்பு அதிகமாகி ஹெக்ளிக் என்ற இடத்தை தெற்கு சூடன் கைப்பற்றியது இதன் காரணமாக நான் வேலைபார்க்கும் இடமான Neem -ல் வேலை பார்க்கும் அனைவரையும் முன் எச்சரிக்கை காரணமாக சூடன் தலை  நகரமான khartoum ல் ஹோட்டல் Regency  தங்க வைத்தார்கள் நான் எப்படியும் வரும் திங்கள் கிழமை (16.04.2012)  மாலை இந்தியா செல்வேன் என்று எதிர்பார்க்கிறேன்.

http://www.sudantribune.com/-News,001-

http://www.maalaimalar.com/2012/03/29161424/south-sudan-airplane-bomb-thro.html


கடந்த ஆண்டு ஆப்பிரிக்காவில் உள்ள சூடான் நாட்டில் இருந்து தெற்கு சூடான் பிரிந்து தனி நாடாக உதயமானது. இதில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இருநாட்டின் எல்லையில் ஹெக்லிக் என்ற இடத்தில் எண்ணை கிணறு உள்ளது. இதற்கு இருநாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இதனால் தான் மோதல் ஏறபட்டது.

தெற்கு சூடான் நாட்டின் 98 சதவீதம் வருமானம் எண்ணை கிணறுகளை நம்பி உள்ளது. இங்கு உற்பத்தியாகும் எண்ணையை சூடான் துறைமுகம் வழியாகத்தான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். இதற்காக குழாய் அமைக்கப்பட்டு உள்ளது.

சூடானுடன் மோதல் வெடித்தது: தெற்கு சூடானில் விமானங்கள் குண்டு வீச்சு
ஆனால் இருநாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து சூடான் இந்த குழய்களை மூடிவிட்டது. இதனால் சூடான் மீது தெற்கு சூடான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக சூடான் ராணுவ விமானங்கள் தெற்கு சூடான் மீது சரமாரியாக குண்டு வீசின. இதில் ஏராளமானோர் பலியாகி இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



எனவே இருநாடுகளும் முழுபோரில் ஈடுபடலாம் என்ற பதட்டம் நிலவுகிறது. பதட்டத்தை தணிக்க ஆப்பரிக்க நாடுகள் யூனியன் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளன.




                              பிறகு மீண்டும் சந்திப்போம்...  

                                                                                                                     அன்புடன் 
                                                                                                                  
                                                                                                                      புருஸ்லீ .கே 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக